பயன்பாட்டு விதிமுறைகள்

ThroughTheScriptures.com (“வலைத்தளம்”) – உடன் தொடர்புடைய மென்பொருள், பொருட்கள், கலந்துரையாடல் அம்சங்கள் மற்றும் வலைத்தளத்தை பயன்படுத்துதல் அல்லது மற்றவர்கள் பயன்படுத்த அனுமதியளித்தல் மூலம் இந்த சட்டபூர்வமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“ஒப்பந்தம்”)-க்கு கட்டுப்பட நீங்கள் (“பயனர்”) ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களுக்காக, இந்த வலைத்தளத்தோடு எந்த விதத்திலும்  கலந்துரையாடும் எந்த ஒரு நபரும் பயனராவார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், வலைத்தளத்தைப் பயன்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. வலைத்தளம், வலைத்தளத்தின் ஏதேனும் உள்ளடக்கம், அல்லது இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால், வலைத்தளப் பயன்பாட்டை தொடராமலிருப்பதுதான் இதற்கான ஒரேயொரு தீர்வு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய சொந்த பொறுப்பில்தான் வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் சார்பாகவோ அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வேறொருவர் சார்பாகவோ இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான சாமர்த்தியமும் அதிகாரமும் உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த ஒப்பந்தத்திலுள்ள சில விதிமுறைகள் வலைத்தளத்தின் உங்கள் பயன்பாட்டிற்கு பொருத்தம் இல்லாதவையாக இருக்கக்கூடும்; ஆயினும், பொருந்தும் எல்லா விதிமுறைகளும் பிணைக்கப்பட்டுள்ளன. வலைத்தளத்தின் உரிமையுள்ள சொந்தக்காரராக, எந்த நேரத்திலும் மற்றும் நேரத்திலிருந்தும் எந்த அறிக்கையும் உங்களுக்கு அளிக்காமல், ThroughTheScriptures.com வலைத்தளத்தில் மாற்றங்களை இடுகையிடுவதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்ற அல்லது முறிக்க மற்றும்  தனியுரிமை மற்றும் தடையற்ற சுயேச்சையான உரிமையை இன்றைக்கான சத்தியம் உலக ஊழியத்திற்கான பள்ளி, இன்க். (“இன்றைக்கான சத்தியம்”) கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஏதேனும் மாற்றங்கள் இங்கு முழுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது போல குறிப்பு மூலமாக இந்த ஒப்பந்தத்த்தில் சேர்க்கப்படுகின்றன.

முடிவுறுத்தல். இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும். இது இன்றைக்கான சத்தியத்தின் சொந்த விருப்பத்தினால் மற்றும் முன் அறிவிப்பு ஏதுமின்றி, அல்லது தரப்பினர்களுக்கு இடையேயான பரஸ்பர எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாகவோ நிறுத்தப்படலாம், ஆனால் பயனரால் அல்ல. முன் அறிவிப்பு ஏதுமின்றி மற்றும் இன்றைக்கான சத்தியத்தின் சொந்த மற்றும் தடையற்ற விருப்பத்தினால் வலைத்தளத்தின் பயனர் அணுகலை இன்றைக்கான சத்தியம் இடைநீக்கம் செய்யலாம், முடிவுறுத்தலாம் அல்லது அகற்றலாம். அப்படிப்பட்ட இடைநீக்கம், முடிவுறுத்தல், அல்லது அகற்றுதல் அல்லது அதன் விளைவுகள் உட்பட்ட ஆனால் அவை மட்டுமே அல்லாத, வணிகம் அல்லது கல்வி குறிக்கீடு, தரவு அல்லது சொத்து இழப்பு, சொத்து சேதம், அல்லது வேறு ஏதேனும் துன்பங்கள், இழப்புகள், அல்லது சேதங்கள் ஆகியவற்றுக்கு இன்றைக்கான சத்தியம் பொறுப்பேற்காது. நீங்களோ அல்லது வேறொரு நபரோ அல்லது அமைப்போ இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் விதிமுறையை மீறினால், இன்றைக்கான சத்தியம் தன்னிச்சையாகவும் அறிவிப்பு ஏதுமில்லாமலும் இந்த ஒப்பந்தத்தையும் வலைத்தளத்தின் உங்கள் அணுகலையும் முடிவுறுத்தலாம். எந்த ஒரு முடிவுறுத்தலுக்கும், உங்களுக்கோ அல்லது எந்த ஒரு மூன்றாம் தரப்புக்கோ, இன்றைக்கான சத்தியம் பொறுப்பாகாது. முடிவுறுத்தலுக்குப் பிறகு, நீங்களோ அல்லது வேறொரு நபரோ அல்லது தரப்பினரோ உங்கள் சொந்த செலவில் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்படும்.

புதுப்பிப்புகள். வலைத்தளத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை இன்றைக்கான சத்தியம், தனது சொந்த விருப்பத்தின் பேரில், அவ்வப்போது உருவாக்கக்கூடும். வெளிப்படையாக கூறப்பட்டிருந்தாலொழிய, அது போன்ற புதுப்பிப்புகள் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும், இன்றைக்கான சத்தியத்தின் சொந்த விருப்பத்தினால் தீர்மானிக்கப்படும் ஒப்பந்தத்தின் எந்த ஒரு மாற்றங்களும் இதில் அடங்கும்.

உரிமையாளர் பொருட்கள். வடிவமைப்புகள், உரை, கிராபிக்ஸ், படங்கள், காணொலி, தகவல், பயன்பாடுகள், மென்பொருள், இசை, ஒலி மற்றும் வேறு பிற கோப்புகள் அடங்கிய வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் மற்றும் அவற்றின் தேர்வும் சீரமைப்பும் (“தள உள்ளடக்கம்”), அதே போல் வலைத்தளம் கொண்டிருக்கும் அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மென்பொருள் மற்றும் பொருட்கள் ஆகியவை பதிப்புரிமைகள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், காப்புரிமைகள், வணிக ரகசியங்கள், அல்லது வேறு உரிமையாளர் உரிமைகள் மற்றும் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. அந்த உள்ளடக்கம் அல்லது பொருட்களை விற்பது, உரிமை அளிப்பது, வாடகைக்கு விடுவது, மாற்றம் செய்வது, விநியோகிப்பது, நகலெடுப்பது, மறுஉருவாக்கம் செய்வது, கைமாற்றுவது, வெளிப்படையாக காண்பிப்பது, வெளிப்படையாக செயல்படுத்துவது, பிரசுரிப்பது, வழித்தோன்றல் வேலைகளை ஏற்பது, திருத்துவது அல்லது உருவாக்குவது முதலியவற்றை செய்வதில்லை என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். வலைத்தளத்திலிருந்து தரவு அல்லது மற்ற உள்ளடகத்தை உருவாக்க அல்லது தொகுக்க, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வலைத்தளப் பொருட்களின் சேகரிப்பு, தொகுப்பு, மறு உருவாக்கம், தரவுதளம் அல்லது விவரத்திரட்டு முதலியவற்றை  முறையாக மீட்டெடுத்தல், அவ்வாறு இங்கு வழங்கப்பட்டாலொழிய, தடைசெய்யப்படுகிறது. இங்கு வெளிப்படையாக வழங்கப்பட்டாலொழிய, வலைத்தள உள்ளடக்கம் அல்லது பொருட்களை எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துதல் தடைசெய்யப்படுகிறது.

உத்தரவாத நிராகரிப்பு. எல்லா தவறுகளும் மற்றும் எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் வலைத்தளம் “இது போன்று” வழங்குகிறது. வியாபாரம், திருப்திகரமான தரம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான பொருத்தம், துல்லியம், அமைதியான இன்பம், மூன்றாம் தரப்பு உரிமைகள் மீறல் இல்லாதவை உட்பட ஆனால் அது மட்டுமே அல்லாத, வெளிப்படையாக, மறைமுகமாக, அல்லது சட்டப்படியாக வலைத்தளத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து உத்தரவாதங்களையும் இன்றைக்கான சத்தியம் நிராகரிக்கிறது. வலைத்தளம் எந்த குறிப்பிட்ட நேரத்திலும் அல்லது இடத்திலும் கிடைக்கும், எந்த ஒரு குறைப்பாடுகளும் அல்லது பிழைகளும் திருத்தப்படும், அல்லது உள்ளடக்கமானது, வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்ககூடிய கூறுகள் இல்லாமல் இருக்கிறது போன்றவற்றிற்கு இன்றைக்கான சத்தியம் உத்திரவாதமோ அல்லது பிரதிநிதித்துவமோ அளிப்பதில்லை. வலைத்தளத்தின் தரம், முடிவுகள் மற்றும் செயல்திறனின் முழு அபாயத்தை நீங்கள் ஏற்கிறீர்கள், அதே போல் சேவை, பழுது அல்லது திருத்தம் ஆகிய எல்லாவற்றின் முழு ஆபத்தையும் செலவையும் நீங்கள் ஏற்கிறீர்கள். இன்றைக்கான சத்தியம், அதன் பிரதிநிதிகள் அல்லது அதன் பணியாளர்களால் கொடுக்கப்பட்ட வாய்வழி அல்லது எழுத்துமூல தகவல்கள், ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகள் உத்தரவாதத்திற்கு இடமளிக்காது அல்லது எந்த விதத்திலும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தை அதிகரிக்காது , மேலும் அப்படிப்பட்ட தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை. சில சட்ட வரம்புகள் சில உத்தரவாதங்கள் அல்லது நுகர்வோர் உரிமைகளின் விலக்கல் அல்லது வரைமுறைப்படுத்தலுக்கு அனுமதி அளிப்பதில்லை. சட்ட வரம்புகளின் சட்டங்களில் ஏதேனும் உங்கள் வலைத்தள பயன்பாட்டிற்கு பொருந்தும் அளவிற்கு, சில விலக்கல்களும் வரைமுறைப்படுத்தல்களும் உங்களுக்கு பொருந்தாமல் இருக்கக்கூடும்.

பொறுப்பின் வரம்பு. மறைமுகமான, அசாதாரணமான, விளைவுசார் அல்லது நிகழ்வுசார் சேதங்கள் உட்பட  வலைத்தள பயன்பாட்டால் அல்லது பயன்பாட்டு திறனின்மையால் எதிர்கொள்ளும் அல்லது தொடர்புடைய நிதி அல்லது சொத்து இழப்புக்கான சேதங்கள், வணிகத் தடங்கல், வணிக வாய்ப்பு இழப்பு, தரவு இழப்பு, அல்லது வேறு துன்பங்கள், சேதங்கள் அல்லது இழப்புகள், எப்படி ஏற்பட்டிருந்தாலும்;  அங்கீகரிக்கப்படாத அல்லது தற்செயலான தரவு மாற்றம் அல்லது அணுகல்; மூன்றாம் நபரின் அறிக்கைகள் அல்லது நடத்தை; வலைத்தள பயன்பாடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும், அப்படிப்பட்ட சேதங்களின் சாத்தியக்கூறு குறித்து இன்றைக்கான சத்தியத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாலும், இன்றைக்கான சத்தியம் மற்றும் அதன் இயக்குனர்கள், அதிகாரிகள், முகவர்கள், ஒப்பந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பணியாளர்கள், உங்களுக்கோ அல்லது எந்தவொரு மூன்றாம் நபருக்கோ பொறுப்புள்ளவர்கள் அல்ல. சில சட்ட வரம்புகள் சில தீர்வுகள் அல்லது சேதங்களின் விலக்கல் அல்லது வரைமுறைப்படுத்தலுக்கு அனுமதி அளிப்பதில்லை. சட்ட வரம்புகளின் சட்டங்களில் ஏதேனும் உங்கள் வலைத்தள பயன்பாட்டிற்கு பொருந்தும் அளவிற்கு, சில விலக்கல்களும் வரைமுறைப்படுத்தல்களும் உங்களுக்கு பொருந்தாமல் இருக்கக்கூடும்.

இழப்பீட்டு உத்தரவாதம். சேதம், பொறுப்பு, உரிமை கோரிக்கை, அதிகார கோரிக்கை, சேதங்கள், செலவுகள்,  இந்த ஒப்பந்தம் அல்லது வலைத்தளத்தின் எந்த ஒரு பயன்பாட்டிற்கும் தொடர்பாக வரும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட பயனர் அல்லது ஏதேனும் வாடிக்கையாளர், பயனர்கள், மாணவர்கள், அல்லது மற்றவர்களின் வலைத்தள உடைமை, பயன்பாடு அல்லது இயக்கத்தினால், அல்லது  தகவல் பரிமாற்றத்தினால் அல்லது இந்த ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள வலைத்தளத்தோடு தொடர்புடைய குறைப்பாட்டால் ஏற்படுகின்ற சொத்து சேதம் அல்லது தரவு இழப்பு சம்பந்தப்பட்ட சேதங்கள், இழப்புகள் அல்லது பொறுப்புகள் எதுவாக இருந்தாலும், இன்றைக்கான சத்தியம் மற்றும் அதன் துணை, இணை நிறுவனங்கள், உருவாக்கியவர், தொடர்பவர்கள் மற்றும்/அல்லது ஒப்படைக்கப்பட்டவர்கள், அதன் ஒவ்வொரு இயக்குனர்கள், அதிகாரிகள், முகவர்கள், ஒப்பந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை வலைத்தள பயனரான நீங்கள், தீங்கற்ற வகையில் வைப்பதாக உறுதியளிக்கிறீர்கள்.

ட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் சர்ச்சைகள். இந்த ஒப்பந்தம் அர்க்கன்ஸாஸ் மாநிலம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். வலைத்தளத்தின் பயன்பாடானது, கூட்டாட்சி சட்டத்தின் கீழ் வரும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையாக கருதப்படக்கூடிய, மாநிலங்களுக்கிடையேயான தரவு பரிமாற்றங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்திலிருந்து அல்லது அது சம்பந்தமாக ஏற்படும் சர்ச்சை அல்லது உரிமைக் கோரிக்கை தரப்பினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படாததாக இருந்தால், பரஸ்பர ஒப்புகையினால் அர்க்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்காவில் உள்ள மத்தியஸ்தரால் நிர்வகிக்கப்படும் ஒரு இடையீடு மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் தரப்பினர் முயற்சிப்பார்கள். ஒப்பந்தம் அல்லது வலைத்தளம் சம்பந்தப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கை இருந்தால், அதற்கான இடம், வைட் கௌண்ட்டி, அர்க்கன்ஸாஸில் உள்ள மாநில நீதிமன்றமாகவோ அல்லது அர்க்கன்ஸாஸின் கிழக்கு மாவட்டத்திற்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றமாக இருக்கும். ஒப்புக்கொள்ளா மன்றத்தின் பாதுகாப்பு ஏதேனுமிருந்தால் அவற்றிலிருந்து பயனர் விலக்களிக்கப்படுவார்.

முழு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமே இன்றைக்கான சத்தியத்திற்கும் பயனர்க்கும் இடையேயான, அதிலுள்ள விஷயத்தின் தொடர்பிலான முழு ஒப்பந்தமாகும், மேலும் இது, இந்த ஒப்பந்தத்தின் விஷயத்தோடு தொடர்புடைய முந்தைய புரிதல்கள், வாக்குறுதிகள், மற்றும் பொறுப்பேற்றல்கள், வாய்வழி அல்லது எழுத்துவடிவில் ஏதேனுமிருந்தால், அவை எல்லாவற்றிற்கும் மேலோங்கி இருக்கிறது. இன்றைக்கான சத்தியத்தால் எழுத்துபூர்வமாக நிறைவேற்றப்பட்டால் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டால் ஒழிய, இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் பகுதியின் மாற்றம், திருத்தம், விலக்களித்தல், முடிவுறுத்தல் அல்லது தள்ளுபடி ஆகியவை பிணைப்படுத்தப்படாது.

உடைமையுரிமை. இன்றைக்கான சத்தியத்தால் வழங்கப்பட்ட வலைத்தளமும் அனைத்து துணை பொருட்களும் இன்றைக்கான சத்தியத்திற்கு சொந்தமானது அல்லது சரியான உரிமம் பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வலைத்தளம் உரிமை பெற்றது, உங்களுக்கு விற்கப்பட்டதல்ல. இன்றைக்கான சத்தியம் வலைத்தளத்திற்கு எந்த பட்டத்தையோ, உடைமை உரிமையையோ அல்லது நலனையோ விற்பனை, தெரிவித்தல், மாற்றல் அல்லது ஒதுக்குதல் முதலியவற்றை செய்வதில்லை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வலைத்தளம் மற்றும் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புக்கு உரிமையான ஏதேனும் மென்பொருள் திட்டங்கள் அல்லது பொருட்கள், ப்ரத்யேகமல்லாத, மாற்றமுடியாத உரிமத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். வலைத்தளம் மற்றும் அனைத்து துணை பொருட்களுக்கும் பொருந்தும் உரிமை, பட்டம் மற்றும் நலன் (பதிப்புரிமைகள், காப்புரிமைகள், வணிக முத்திரைகள் மற்றும் சேவை முத்திரைகள் மற்றும் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட) ஆகியவற்றை இன்றைக்கான சத்தியம் வைத்துக்கொண்டுள்ளது.

பயன்பாடு.

  1. வலைத்தளம் அல்லது ஏதேனும் பகுதியை நகலெடுத்தல், மறுஉருவாக்கம், பிரதி எடுத்தல், மொழிபெயர்ப்பு, மறுஉருவாக்க பொறியியல் செயல்முறை, தழுவல், தொகுப்பு நீக்கம், பிரித்தெடுத்தல், மறுஉருவாக்கமெடுத்தல், மாற்றம் அல்லது மாற்றம் செய்தல் முதலியவை இன்றைக்கான சத்தியத்தின் முன்னரே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாவிட்டால், இந்த ஒப்பந்தத்தில் அதுபோல் வழங்கப்படவில்லை என்றால், தடை செய்யப்படுகிறது. ஏதேனும் கணினி திட்டத்துடன் வலைத்தளம் இணைக்கப்படுவது அல்லது சேர்க்கப்படுவது மற்றும் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட வேலைகள் அல்லது திட்டங்களின் உருவாக்கம் அல்லது அதன் ஏதேனும் பகுதி முதலியவையும் இன்றைக்கான சத்தியத்தின் முன்னரே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாவிட்டால் தடை செய்யப்படுகிறது.
  2. வலைத்தளத்தின் ஏதேனும் பகுதியின் மறுஉருவாக்கம், நகலெடுத்தல், தழுவல் அல்லது சுரண்டலின் அனுமதியின் கோரிக்கைகள், இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்ட இன்றைக்கான சத்தியத்தின் முகவரிக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்றைக்கான சத்தியத்தின் சொந்த, தடையற்ற மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அனுமதி அளிக்கப்படும்.
  3. எந்த ஒரு நோக்கத்திற்காகவும் வலைத்தளத்தையோ அல்லது ஏதேனும் பகுதியையோ, வாடகைக்கு விடுதல், உரிமம் பெறுதல், விற்றல், ஒப்புவிக்கப்படுதல், பரிமாற்றப்படுதல், மறு-குத்தகைக்கு விடுதல், துணை-உரிமம் பெறுதல் அல்லது தெரிவிக்கப்படுதல் முதலியவற்றை செய்வதில்லை. இந்த ஒப்பந்தத்தை மீறி வலைத்தளத்தை வாடகைக்கு விடுதல், உரிமம் பெறுதல், விற்றல், ஒப்புவிக்கப்படுதல், பரிமாற்றப்படுதல், மறு-குத்தகைக்கு விடுதல், துணை-உரிமம் பெறுதல், போக்குவரத்து, அன்பளிப்பு அல்லது நிலைமாறிய ஏற்பாடு முதலியவை செல்லாதவையாகவும் பயனற்றதாகவும் இருக்கும். இந்த ஒப்பந்தத்தை மீறும் எந்த ஒரு நடவடிக்கையும் அல்லது அத்தகைய நடவடிக்கையை தடுக்கத் தவறுவதும் சிவில் மற்றும்/அல்லது குற்றவியல் வழக்கை ஏற்படுத்தலாம்.
  4. இன்றைக்கான சத்தியத்தைத் தவிர வேறு நிறுவனங்களின் அல்லது அவற்றால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் அல்லது மென்பொருள் மற்றும் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டவை அல்லது பதிவுசெய்யப்பட்டவை (“முன்றாம் தரப்பு மென்பொருள்”) மற்றும் அதன் பயன்பாடு முதலியவை இந்த ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது. வலைத்தளத்தோடு இணைந்த அதன் திட்டமிடப்பட்ட பயன்பாட்டைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மூன்றாம் தரப்பு மென்பொருளைப் பயன்படுத்துதல் தடை செய்யப்படுகிறது.

மூன்றாம் தரப்பினர் தளங்களும் உள்ளடக்கமும். வலைத்தளமானது பிற வலைத்தளங்களின் (“மூன்றாம் தரப்பு தளங்கள்”) இணைப்புகளை கொண்டிருக்கலாம் (அதன் மூலம் அல்லது அதற்கு அனுப்பலாம்), அது போல, கட்டுரைகள், புகைப்படங்கள், உரை, க்ராபிக்ஸ், படங்கள், வடிவமைப்புகள், இசை, ஒலி, காணொலி, தகவல்கள், பயன்பாடுகள், மென்பொருள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான பிற உள்ளடக்கம் அல்லது விஷயங்களைக் கொண்டிருக்கலாம் (“மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்”). மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தின் துல்லியம், தகுதி அல்லது முழுமைத் தன்மையை இன்றைக்கான சத்தியம் சோதிப்பதில்லை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அணுகும் மூன்றாம் தரப்பினர் தளங்கள் அல்லது வலைத்தளம் மூலம் கிடைக்கும் அல்லது நிறுவப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் இடுகைக்கோ இன்றைக்கான சத்தியம் பொறுப்பல்ல, மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் அல்லது அதிலுள்ள உள்ளடக்கம், துல்லியம், தீங்கு விளைவிக்கும் தன்மை, கருத்துகள், நம்பகத்தன்மை, ரகசியகாப்பு நடைமுறைகள், அல்லது வேறு நடைமுறைகளும் அதில் அடங்கும். மூன்றாம் தரப்பு தளம் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தோடு இணைதல், அல்லது பயன்பாடு அல்லது நிறுவுதலுக்கு அனுமதி அளித்தல் என்பது இன்றைக்கான சத்தியத்தால் அங்கீகாரம் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்டது என பொருள்படாது. சில குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு தளங்களை அணுகுவதை தடுக்க சில கணினிகள் தடைசெய்யும் மென்பொருளை வைத்திருந்தாலும், வலைத்தளத்தைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் அணுகுதலுக்கு இன்றைக்கான சத்தியம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

தளக் கொள்கைகள், மாற்றம் மற்றும் தீவிரத்தன்மை

வலைத்தளத்தில் இடுகையிடப்பட்ட எங்களுடைய ரகசியகாப்பு கொள்கை போன்ற மற்ற கொள்கைகளை தயவு செய்து மறுஆய்வு செய்யவும். வலைத்தளம், கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளில் எந்நேரத்திலும் மாற்றங்கள் செய்வதற்கான உரிமை இன்றைக்கான சத்தியத்திற்கு உண்டு. வலைத்தளத்தின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் விதிகளில் ஏதாவது தவறாக, வெறுமையானதாக அல்லது வேறு காரணத்துக்காக செயல்படுத்தமுடியாததாக கருதப்படுமானால், அவ்விதி தீவிரமானதாக கருதப்படும், மேலும் மீதமுள்ள விதிகளின் ஏற்புடைமை மற்றும் செயலாக்கத்தன்மையை பாதிக்காது.

தொடர்பு கொள்க

வலைத்தளத்தின் விதிமுறைகள் அல்லது கொள்கைகள் குறித்த ஏதேனுமொன்றில் கேள்விகள் இருந்தால், பின்வரும் முகவரியை தொடர்பு கொள்க:

Truth for Today World Mission School, Inc.
P.O. Box 2044
Searcy, Arkansas
72145-2044, U.S.A.