எங்கள் பள்ளி அல்லது கல்விப் பிரிவுகள் (courses) குறித்த கேள்விகள் உங்களிடம் உள்ளனவா? உங்களுடைய பல கேள்விகளுக்கான விடைகளை எங்களுடைய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில் நீங்கள் காணலாம்.
ஆன்லைன் பள்ளி குறித்த கேள்விகள்
- இப்பள்ளியின் நோக்கம் என்ன?
- வகுப்புகள் எங்கே நடத்தப்படுகின்றன?
- இப்பள்ளி சமயபோதகர்களாகப் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும்தானா?
- கல்விப் பிரிவு ஒன்றில் சேர்வதற்கு நான் கிறிஸ்துவனாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருக்கவேண்டுமா?
- இக்கல்விப் பிரிவுகளில் எந்த இனப்பிரிவைச் சேர்ந்த சமயக்கோட்பாடு கற்றுத்தரப்படுகிறது?
- Through the Scriptures அங்கீகாரம் பெற்ற பள்ளியா?
- Through the Scriptures நிறைவுச் சான்றிதழ்களை வழங்குகிறதா?
- Through the Scriptures அமைச்சகத்துக்கான உரிமங்களை வழங்குகிறதா?
- வேறு கல்விப் பிரிவுகள் உள்ளனவா?
- இப்பள்ளி வேறு மொழிகளிலும் உள்ளதா?
- இப்பள்ளியை எங்கள் தேவாலயம் எவ்வாறு பயன்படுத்த முடியும்?
- Through the Scriptures ஆன்லைன் பள்ளிக்குப் பின் இருப்பவர் யார்?
- கல்விப் பிரிவின் ஆசிரியர்கள் யார்?
கல்விப் பிரிவு சேர்க்கை குறித்த கேள்விகள்
- இப்பள்ளியின் கல்விப் பிரிவில் சேர்வதற்கான முன்நிபந்தனைகள் யாவை?
- என்னால் எந்த கல்விப் பிரிவுகளில் சேர முடியும்?
- ஒவ்வொரு கல்விப் பிரிவும் எத்தனை காலம் நீடிக்கும்?
- கல்விப் பிரிவுகள் எப்போது தொடங்கும்?
- நான் ஒரே ஒரு கல்விப் பிரிவை மட்டும் எடுக்கலாமா?
- ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்விப் பிரிவில் என்னால் சேரமுடியுமா?
- தனித்தனி பாடப்புத்தகங்கள் அல்லது பிற பொருட்களை நான் பெற வேண்டியிருக்குமா?
- தனிப்பட்ட விருப்பத்தேர்வு மற்றும் அரையாண்டு பாடத்துக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
- நான் தனிப்பட்ட விருப்பத்தேர்வின் கீழ் ஒரு கல்விப் பிரிவை தொடங்கினால், பின்னர் அரையாண்டு பாடத்துக்கு மாற முடியுமா?
- நான் அரையாண்டு பாடத்தின் கீழ் ஒரு கல்விப் பிரிவை தொடங்கினால், வரிசைக்குப் புறம்பான ஒரு மாறுபட்ட கல்விப் பிரிவை பின்னர் எடுக்க முடியுமா?
- நான் பின்பற்ற விரும்பும் அரையாண்டு அல்லது காலாண்டு நடையை எங்கே தேர்ந்தெடுப்பது?
- 50-நாள் கால வரம்பிற்குள் என்னுடைய கல்விப் பிரிவை பூர்த்தி செய்யாவிட்டால் நான் என்ன செய்வது?
- கல்விப் பிரிவை பூர்த்தி செய்வதற்கு முன்பே என்னுடைய கல்விப் பிரிவு அணுகல் முடிவுபெற்றால் என்ன செய்வது? மீதமுள்ளவற்றை முடிக்க நான் பின்னர் வரலாமா?
பணம் செலுத்துதல் குறித்த கேள்விகள்
- ஒரு கல்விப் பிரிவில் சேர நான் பணம் செலுத்த வேண்டுமா?
- ஒரு கல்விப் பிரிவில் சேர எவ்வளவு செலவாகும்?
- ஒவ்வொரு கல்விப் பிரிவிற்கும் நான் எப்போது பணம் செலுத்த வேண்டும்?
- பணம் செலுத்துவதற்கான வழிகள் யாவை?
- அமெரிக்க டாலர் அல்லாத வேறு நாணயத்தை நான் பயன்படு்த்தும் போது கூட எனது கடன் அல்லது பற்று அட்டையை நான் பயன்படுத்தலாமா?
கல்விப் பிரிவை மேற்கொள்ளுதல் குறித்த கேள்விகள்
- ஒரு கல்விப் பிரிவை மேற்கொள்ளும்போது நான் எதை எதிர்பார்ப்பது?
- கல்விப் பிரிவின் உள்ளடக்கத்தின் மாதிரிகள் உள்ளனவா?
- கல்வி உரைகள் யாவை?
- ஒவ்வொரு கல்விப் பிரிவின் இறுதியிலும் கல்வி உரையை நான் என்ன செய்வது?
- கல்வி உரையின் அச்சிடப்பட்ட நகல் ஒன்றைப் பெற முடியுமா?
- கல்வி உரையின் ஒரு நகலை நானே அச்சிடமுடியுமா?
- கல்விப் பிரிவுகள் எவ்வாறு தரநிலைப்படுத்தப்படுகின்றன?
- என்னுடைய தரநிலைகளின் எழுத்துப்படி உள்ளதா?
- மற்ற மாணவர்களுடன் நான் கலந்துரையாடுவது எவ்வாறு?
தேர்வுகள் குறித்த கேள்விகள்
- எத்தனை தேர்வுகள் உள்ளன?
- ஒவ்வொரு தேர்வையும் நான் எப்போது மேற்கொள்வது?
- ஒவ்வொரு தேர்விலும் எத்தனை கேள்விகள் உள்ளன?
- தேர்வுகளில் உள்ள கேள்விகள் எத்தகையவை?
- தேர்வுகள் எந்தப் பாடங்களை உள்ளடக்குகின்றன?
- தேர்வுகள் எப்போது தரநிலைப்படுத்தப்படுகின்றன?
- நான் தவறவிட்ட தேர்வுக் கேள்விகளை என்னால் காண முடியுமா?
- தேர்வுகளுக்கு காலவரையறை உள்ளதா?
- தேர்வுகளுக்கான தயாரிப்பில் எனக்கு உதவி புரிய கல்வி வழிகாட்டி உள்ளதா?
- தேர்வுகளை மேற்கொள்ளும் போது பைபிள், குறிப்புகள் அல்லது வேறு உதவியை நான் பயன்படுத்தலாமா?
- அடுத்த பிரிவுக்குச் செல்ல நான் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்?
- 70% அல்லது அதற்கு மேலும் எடுத்து நான் வெற்றி பெற்ற தேர்வை மீண்டும் மேற்கொள்ளலாமா?
- விரிவான தேர்வை நான் மீண்டும் மேற்கொள்வது எவ்வாறு?
- தேர்வு சமயத்தின் போது கணினி செயலிழப்பு அல்லது இணைய இணைப்பு இழப்பு ஏற்பட்டால் என்னவாகும்?
தொழில்நுட்பக் கேள்விகள்
- இந்த வலைத்தளத்தை பயன்படுத்தத் தேவைப்படும் குறைந்தபட்ச கணினித் தேவைகள் யாவை?
- இணைய இணைப்பிலிருந்து நான் விலகியிருக்கும் போது என்னால் படிக்க முடியுமா?
- Through the Scriptures-உடன் பயிலும் போது எனது டேப்ளட் அல்லது மொபைல் சாதனத்தை நான் பயன்படுத்தலாமா?
- என் கணக்குடன் சம்பந்தப்பட்ட கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் முகவரியை என்னால் மாற்ற முடியுமா?
- என்னால் கல்வி உரையை சரியாக பார்க்க முடியவில்லை அல்லது அது சரியாக காண்பிக்கப்படவில்லை. அப்போது நான் என்ன செய்வது?
- வலைத்தளம் சரியாக வேலை செய்யவில்லை. அப்போது நான் என்ன செய்வது?
- என் தனிப்பட்ட தகவல் பாதுகாக்கப்படுகின்றதா?
ஆதரவு சம்பந்தப்பட்ட கேள்விகள்
- நான் தொடங்கிய கல்விப் பிரிவை தொடர்வது எவ்வாறு?
- நான் ஏற்கனவே நிறைவு செய்த கல்விப் பிரிவை மீண்டும் மேற்கொள்ளலாமா?
- கல்வி உரையின் என் டிஜிட்டல் நகல் தொலைந்துவிட்டது. மற்றொரு நகலை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
- கல்வி உரையின் என் டிஜிட்டல் நகல் தொலைந்துவிட்டது மற்றும் என் கல்விப் பிரிவு அணுகல் முடிவுபெற்றது. மற்றொரு நகலை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
- என் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். என் கணக்குக்கு மீண்டும் செல்வது எவ்வாறு?
- நான் பதிவு செய்யும்போது பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கை இனிமேல் என்னால் அணுக இயலாது. என் கணக்குக்கு மீண்டும் செல்வது எவ்வாறு?
- என் கணக்கை வேறு யாருடனாவது பகிர முடியுமா?
- என் கணக்கை வேறொரு நபருக்கு மாற்ற முடியுமா?
- நான் எங்கே ஆதரவு பெறுவது?
ஆன்லைன் பள்ளி குறித்த கேள்விகள்
கே. இப்பள்ளியின் நோக்கம் என்ன?
இயேசு அவரது மக்களுக்கு ஒரு பணியை கொடுத்தார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்தேயு 28:19, 20; NASB). ஒவ்வொரு தேசத்திலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவருக்கு முழு பைபிளையும் உபதேசிக்கும் பணியில் Through the Scriptures முழுமையாக ஈடுபட்டுள்ளது.
கே. வகுப்புகள் எங்கே நடத்தப்படுகின்றன?
கல்விப் பிரிவுகள் வாசித்தலை சார்ந்தவை மற்றும் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. உங்களுக்கு இணைய அணுகல் இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் இக்கல்விப் பிரிவுகளை அணுகலாம்.
கே. இப்பள்ளி சமயபோதகர்களாகப் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும்தானா?
ஒரு திடமான மற்றும் முழுமையான வேதாகம அஸ்திவாரத்தை நாம் வழங்கினாலும், Through the Scriptures “சமயபோதகர் பள்ளி” எனக் கருதப்படவேண்டியது அல்ல. தேவனின் வார்த்தைகளை மேலும் அதிகமாக அறிய விரும்புவோர்க்கு பயன்படக்கூடிய வகையில் இப்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கே. கல்விப் பிரிவு ஒன்றில் சேர்வதற்கு நான் கிறிஸ்துவனாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருக்கவேண்டுமா?
இல்லை. அறிந்து கொள்ள நீங்கள் வருவது மட்டுமே “தேவையான” ஒன்றாகும். “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்” (மத்தேயு 11:15).
கே. இக்கல்விப் பிரிவுகளில் எந்த இனப்பிரிவைச் சேர்ந்த சமயக்கோட்பாடு கற்றுத்தரப்படுகிறது?
இக்கல்விப் பிரிவுகளில் சமயப்பிரி்வினை அல்லது மதப்பிரிவினை, ஒப்புதல் வாக்குமூலம் அல்லது நம்பிக்கை வாக்குமூலம் உபதேசிக்கப்படுவதில்லை. அப்போஸ்தல் பவுல் அறிவுறுத்தினார், “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்” (1 கொரிந்தியர் 1:10). இயேசுவின் தேவாலயம் இப்பிரிவுகளிலிருந்து விடுபட வேண்டுமானால், நாம் அனைவரும் ஒரு பொதுவான நியமத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும்: தேவனே நமக்கு அளித்துள்ள செய்தி. அப்படிப்பட்ட பிரிவை ஏற்படுத்தும் மரபுகளையும் மனிதனின் தேவைகளையும் புறந்தள்ள எமது கல்விப் பிரிவுகளின் ஆசிரியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்; தேவன் அவருடைய பைபிளில் கொடுத்துள்ள பரிசுத்தமான செய்தியை உபதேசிக்க அவர்கள் முற்படுகின்றனர். “நற்-சிந்தனையுடைய” பெரென்ஸ் செய்ததைப் போல “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தனர்” (அப்போஸ்தலர் 17:11) நீங்களும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கே. Through the Scriptures அங்கீகாரம் பெற்ற பள்ளியா?
Through the Scriptures அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம் அல்ல. எனினும், பைபிளின் ஆழமான அறிவு தேவைப்படும் அல்லது பாராட்டப்படும் எந்த இடத்திலும் முழு பைபிளையும் கற்றதற்கான ஒரு நிறைவுச் சான்றிதழ் உயர்வானதாக மதிக்கப்படவேண்டும்.
கே. Through the Scriptures நிறைவுச் சான்றிதழ்களை வழங்குகிறதா?
கல்விப் பிரிவின் குழுவில் உள்ள ஒவ்வொரு கல்விப் பிரிவும் முடிவடைந்தவுடன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கல்விப் பிரிவின் குழுவுக்கான ஒரு உதாரணம் கிறிஸ்துவின் வாழ்க்கை, 1; கிறிஸ்துவின் வாழ்க்கை, 2; மத்தேயு 1—13; மத்தேயு 14—28; மாற்கு; லூக்கா 1:1—9:50; லூக்கா 9:51—24:53; யோவான் 1—10; யோவான் 11—21; அப்போஸ்தலர் 1—14; மற்றும் அப்போஸ்தலர் 15—28 முதலியவற்றை உள்ளடக்கிய புதிய ஏற்பாடு வரலாறு . கல்விப் பிரிவுகள் குழு குறித்த மேலும் அதிக விவரங்களுக்கு, அரையாண்டு பாடங்கள் பக்கத்தை பார்க்கவும்.
கே. Through the Scriptures அமைச்சகத்துக்கான உரிமங்களை வழங்குகிறதா?
பைபிளை போதிக்க எவருக்கும் உரிமம் தேவையில்லை மற்றும் Through the Scriptures அமைச்சகத்துக்கு எவருக்கும் சான்றளிப்பதில்லை. தேவனின் சேவைக்கு ஒருவனை தகுதியுள்ளவனாக்குவது பைபிளேயாகும் மேலும் நாம் கற்றுத்தருவதும் அதுவேயாகும். “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16, 17).
கே. வேறு கல்விப் பிரிவுகள் உள்ளனவா?
புதிய கல்விப் பிரிவுகள் அவை இருக்கும் போது சேர்க்கப்படுகின்றன. தற்போது வழங்கப்படுகின்ற கல்விப் பிரிவுகளில் உள்ளடங்கிய அதே விவரங்களைக் கொண்ட முழுமையான பைபிளை கொண்டிருப்பதே எமது குறைந்தபட்ச இலக்காகும்.
கே. இப்பள்ளி வேறு மொழிகளிலும் உள்ளதா?
Through the Scriptures இருபத்து-மூன்று மொழிகளில் உள்ளது! ஆங்கிலத்தைத் தவிர, அரபு, பெங்காலி, சீன, பிரஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, இந்தி, இந்தோனேசிய, ஜப்பனீஸ், கன்னடம், கொரிய, மலையாளம், மராத்தி, நேபாளி, போர்த்துகீசியம், பஞ்சாபி, ரஷிய, ஸ்பானிஷ், தமிழ், தெலுங்கு, உருது, மற்றும் வியட்நாம் மொழிகளில் கல்விப் பிரிவுகளை வழங்குகிறோம். ஒவ்வொரு கல்விப் பிரிவையும் மொழி பெயர்க்க சில மணிநேரம் எடுத்துக் கொள்வதால், ஆங்கிலத்தில் கிடைக்கின்ற கல்விப் பிரிவுகள் அனைத்தும் வேறு மொழிகளில் தொடக்கத்தில் கிடைப்பதில்லை. இறுதியில், கல்விப் பிரிவுகளின் முழுத் தேர்வும் இவ்வனைத்து மொழிகளிலும் கிடைக்கும்.
கே. இப்பள்ளியை எங்கள் தேவாலயம் எவ்வாறு பயன்படுத்த முடியும்?
படிப்பின் உள்ளூர் குழுவின் அங்கமானது ஒரு பயனுள்ள திட்டத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். உங்கள் சபையில் ஒரு உள்ளூர் Through the Scriptures பள்ளியை செயல்படுத்துவதற்கான குறிப்புகளை எமது பள்ளி ஒன்றை எவ்வாறு தொடங்குவது பக்கத்தில் பார்க்கவும்.
கே. Through the Scriptures ஆன்லைன் பள்ளிக்குப் பின் இருப்பவர் யார்?
Through the Scriptures, ஸர்ஸி, அர்க்கன்ஸாவில் உள்ள இன்றைக்கான சத்தியம், பன்முக, இலாப நோக்கமற்ற, மதப்பிரச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தாபனத்தின் ஒரு பணியாகும்.
கே. கல்விப் பிரிவின் ஆசிரியர்கள் யார்?
பைபிளை உபதேசிக்க தங்கள் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்களைப் பற்றி படிக்க எங்கள் நூலாசிரியர்கள் குறித்து என்ற பக்கத்திற்கு விஜயம் செய்யவும்.
கல்விப் பிரிவு சேர்க்கை குறித்த கேள்விகள்
கே. இப்பள்ளியின் ஒரு கல்விப் பிரிவில் சேர்வதற்கான முன்நிபந்தனைகள் யாவை?
முன்நிபந்தனைகள் எதுவுமில்லை. எமது கல்விப் பிரிவுகள் அனைவர்க்கும் திறந்தே உள்ளது.
கே. என்னால் எந்த கல்விப் பிரிவுகளில் சேர முடியும்?
இருக்கின்ற கல்விப் பிரிவுகள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் விருப்பத்தேர்வு உங்களுடையது. பைபிளின் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க வேண்டும் என நீங்கள் ஏற்கனவே நினைத்திருந்தாலொழிய, கிறிஸ்துவின் வாழ்க்கை, 1 என்பதிலிருந்து தொடங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
கே. ஒவ்வொரு கல்விப் பிரிவும் எத்தனை காலம் நீடிக்கும்?
அக்கல்விப் பிரிவில் நீங்கள் சேர்ந்த நேரத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு கல்விப் பிரிவையும் முடிப்பதற்கு 50 நாட்கள் வரை உள்ளன.
கே. கல்விப் பிரிவுகள் எப்போது தொடங்கும்?
நாங்கள் பரிந்துரைத்த அரையாண்டு அல்லது காலாண்டு அட்டவணைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கிறோம் (மேலும் அதிக தகவல்களுக்கு அரையாண்டு பாடங்கள் என்பதை பார்க்கவும்), ஆயினும் ஒரு கல்விப் பிரிவை நீங்கள் எந்நேரத்திலும் தொடங்கலாம். ஒரு கல்விக் குழு அல்லது உள்ளூர் TTS பள்ளியின் ஒரு அங்கமாக நீங்கள் இருந்தால், மற்ற குழு உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சேரலாம்.
கே. நான் ஒரே ஒரு கல்விப் பிரிவை மட்டும் எடுக்கலாமா?
ஆம். நீங்கள் கல்விப் பிரிவைத் தொடங்கிய பிறகு, மற்ற கல்விப் பிரிவுகளைத் தொடர்வீர்கள் என நாங்கள் நினைத்தாலும், அதனை தேர்ந்தெடுப்பவர்கள் நீங்கள் தான்; எந்த ஒரு கல்விப் பிரிவிற்கும் நீங்கள் தானாகவே சேர்த்துக்கொள்ளப்பட மாட்டீர்கள் அல்லது கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
கே. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்விப் பிரிவில் என்னால் சேர முடியுமா?
எமது அமைப்பானது, ஒரு நேரத்தில் ஒரே ஒரு கல்விப் பிரிவை எடுப்பதற்கு மட்டுமே அனுமதியளிக்கிறது. எனினும், தற்போதைய கல்விப் பிரிவு முடிவதற்கான முழு 50 நாட்களுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு கல்விப் பிரிவை முடித்த பிறகு, அடுத்த கல்விப் பிரிவை தொடர்வதற்கான விருப்பத்தேர்வு உங்களுடையது.
கே. தனித்தனி பாடப்புத்தகங்கள் அல்லது பிற பொருட்களை நான் பெற வேண்டியிருக்குமா?
கல்விப் பிரிவிற்குத் தேவையான அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும். இணைய இணைப்புக்கான வழிவகையும் கற்பதற்கு ஆர்வமும் இருந்தால் போதும். பைபிளின் ஒரு நகலை வைத்திருப்பதை வலுவாக பரிந்துரைக்கிறோம், படிப்புப் புத்தகம் ஒவ்வொன்றிலும் படித்துக் கொண்டிருக்கும் வேதாகமத்தின் பாகம் உள்ளடங்கும்.
கே. தனிப்பட்ட விருப்பத்தேர்வு மற்றும் அரையாண்டு பாடத்துக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
தனிப்பட்ட விருப்பத்தேர்வு எந்த கல்விப் பிரிவை எடுப்பது என்பதை முதலிலேயே தெரிந்து கொண்டிருப்பவர் அல்லது கல்விப் பிரிவு முழுதும் தன்னதேயான வரிசையை பின்பற்ற விருப்பமுடையவருக்காக திட்டமிடப்பட்டுள்ளது. முழு பைபிளையும் இறுதிவரை கற்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை பின்பற்ற விரும்புவோருக்காக அரையாண்டு பாடங்கள் விருப்பத்தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள உண்மையான ஒரேயொரு வேறுபாடு என்னவெனில் தனிப்பட்ட விருப்பத்தேர்வு உங்களுடைய முதல் கல்விப் பிரிவைத் தேர்ந்தெடுக்க அனுமதியளிக்கிறது, அரையாண்டு பாடங்கள் உங்களுக்காக முதல் கல்விப் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறது. வேறு அனைத்து விதத்திலும் அவை தொழில்நுட்ப ரீதியாக ஒரே மாதிரி உள்ளன. வெவ்வேறு தேவைகள் உள்ளவர்கள் பள்ளியை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்குவதற்காகவே வெவ்வேறு பரிந்துரைகளைக் கொண்ட இரு விருப்பத்தேர்வுகளை நாங்கள் அளிக்கிறோம்.
கே. நான் தனிப்பட்ட விருப்பத்தேர்வின் கீழ் ஒரு கல்விப் பிரிவை தொடங்கினால், பின்னர் அரையாண்டு பாடத்துக்கு மாற முடியுமா?
மாறுவதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒரு கல்விப் பிரிவை நீங்கள் முடித்த பிறகு, அடுத்துவரும் கல்விப் பிரிவு குறித்து பள்ளி பரிந்துரை செய்யும், நீங்கள் விரும்பினால் வேறொரு கல்விப் பிரிவை தேர்ந்தெடுக்கவும் வழி செய்யும். கல்விப் பிரிவு குழுவிலுள்ள அனைத்து கல்விப் பிரிவுகளும் முடிந்த பிறகு சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு விருப்பத்தேர்வுகளும் தகுதியானவை.
கே. நான் அரையாண்டு பாடத்தின் கீழ் ஒரு கல்விப் பிரிவை தொடங்கினால், வரிசைக்குப் புறம்பான ஒரு கல்விப் பிரிவை பின்னர் எடுக்க முடியுமா?
ஆம். ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் பிறகு, அடுத்துவரும் கல்விப் பிரிவு குறித்து பள்ளி பரிந்துரை செய்யும், நீங்கள் விரும்பினால் வேறொரு கல்விப் பிரிவை தேர்ந்தெடுக்கவும் அனுமதி அளிக்கும். எப்போதும் தேர்வு செய்வது நீங்கள் தான்.
கே. நான் பின்பற்ற விரும்பும் அரையாண்டு அல்லது காலாண்டு நடையை எங்கே தேர்ந்தெடுப்பது?
அரையாண்டு மற்றும் காலாண்டு அட்டவணைகள் (அரையாண்டு பாடங்கள் பக்கத்தில் உள்ளவை) நீங்கள் விரும்புவதை பின்பற்றுவதற்கான பரிந்துரைகளேயாகும். வலைத்தளத்திலிருக்கும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஒருபோதுமில்லை.
கே. 50-நாள் கால வரம்பிற்குள் என்னுடைய கல்விப் பிரிவை பூர்த்தி செய்யாவிட்டால் நான் என்ன செய்வது?
50-நாள் கால வரம்பிற்குள் உங்களுடைய கல்விப் பிரிவை முடிக்காவிட்டால், நீங்கள் 30-நாள் நீட்டிப்பை குறைந்த விலையில் வாங்கலாம். முதல் 50-நாட்கள் முடிந்த பிறகே நீட்டிப்பை வாங்க முடியும். ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை.
கே. கல்விப் பிரிவை பூர்த்தி செய்வதற்கு முன்பே என்னுடைய கல்விப் பிரிவு அணுகல் முடிவு பெற்றால் என்ன செய்வது? மீதமுள்ளவற்றை முடிக்க நான் பின்னர் வரலாமா?
கல்விப் பிரிவு முடிந்து சில காலம் ஆகியிருந்தாலும், நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு 30-நாள் நீட்டிப்பை வாங்குவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உண்டு.
பணம் செலுத்துதல் குறித்த கேள்விகள்
கே. ஒரு கல்விப் பிரிவில் சேர நான் பணம் செலுத்த வேண்டுமா?
ஆம். Through the Scriptures, இன்றைக்கான சத்தியம், இலாப நோக்கமற்ற, பைபிள் உபதேசம் மற்றும் மதப்பிரச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தாபனத்தின் ஒரு பணியாகும். இந்த அளவிலான ஒரு திட்டத்திற்கு கணிசமான செலவு ஆகும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கல்வி பிரிவுடன், இத்திட்டத்தை நாங்கள் பராமரிக்கவும் மற்றும் ஆதரிக்கவும், புதிய பாடங்களை உருவாக்கவும், அச்சிறந்த கல்விப் பிரிவுகளை உங்களைப் போலவே வேறு மொழியினரும் கற்பதற்காக பாடங்களை மொழிபெயர்க்கவும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீர்கள்.
கே. ஒரு கல்விப் பிரிவில் சேர எவ்வளவு செலவாகும்?
ஒவ்வொரு கல்விப் பிரிவின் விலையும் “சேர்க்கை” பொத்தானுடன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் காணும் விலையானது எங்களால் வசூலிக்கப்படும் விலையாகும். ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றைக் கட்டணத்தை தவிர வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. உலகின் எந்த இடத்திலிருந்து எங்கள் வலைத்தளத்தை நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதைப் பொருத்து விலை மாறுபடும். பைபிளை கற்க விரும்புவோர்க்கு நிதி தடை இல்லாத வகையில், இத்திட்டத்தை அளிக்கும் எங்கள் செலவுகளை சமநிலைப்படுத்த நாங்கள் முயற்சிப்பதால், எங்கள் விலைகளை அமைக்கும் போது, ஒவ்வொரும் நாட்டின் சராசரி பொருளாதார வழிவகைகளை கருதுவதற்கு மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இவ்விஷயத்தில் உங்கள் புரிதலை பாராட்டுகிறோம்.
கே. ஒவ்வொரு கல்விப் பிரிவிற்கும் நான் எப்போது பணம் செலுத்த வேண்டும்?
கல்விப் பிரிவில் சேர்வதற்கு நீங்கள் தயாராகும் சமயத்தில், ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் தனித்தனியாக பணம் செலுத்துவீர்கள். மற்ற கல்விப் பிரிவுகளுக்கு ஒருபோதும் தானாகவே சேர்க்கப்படமாட்டீர்கள் அல்லது கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
கே. பணம் செலுத்துவதற்கான வழிகள் யாவை?
விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ், ஜேசிபி, டிஸ்கவர் மற்றும் டைனர்ஸ் க்ளப் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கிறோம். உங்களுடைய கடன் அல்லது பற்று அட்டை, பின்வரும் சின்னத்தில் ஏதேனும் ஒன்றை கொண்டிருந்தால், எங்கள் கல்விப் பிரிவுகளில் சேர்வதற்கு உங்கள் அட்டையை பயன்படுத்தலாம்:
கே. அமெரிக்க டாலர் அல்லாத வேறு நாணயத்தை நான் பயன்படுத்தும் போது கூட எனது கடன் அல்லது பற்று அட்டையை நான் பயன்படுத்தலாமா?
பெரும்பாலான வங்கிகளும் கடன் அட்டை நிறுவனங்களும் வெளிநாட்டு நாணயத்தை வாங்க அனுமதியளிக்கும், மேலும் உங்கள் நாணயத்திற்காக சரிசெய்யப்பட்ட தொகை உங்கள் அட்டையின் மேல் விதிக்கப்படும். நாணய பரிமாற்றத்திற்காக ஒரு சிறு கட்டணம் உங்கள் அட்டையின் மேல் விதிக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கல்விப் பிரிவை மேற்கொள்ளுதல் குறித்த கேள்விகள்
கே. ஒரு கல்விப் பிரிவை மேற்கொள்ளும்போது நான் எதை எதிர்பார்ப்பது?
கல்விப் பிரிவுகள் வாசித்தலை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் “படிப்புப் புத்தகம்” என்றழைக்கப்படும் டிஜிட்டல் பாடப்புத்தகத்தை மையமாகக் கொண்டவை. கல்விப் பிரிவை முடிப்பதற்கு 50 நாட்கள் உள்ளன, ஆனால் அதில் வேகம் காண்பிப்பது உங்கள் கையில் உள்ளது. மேலும் அதிக தகவல்களுக்கு, மாதிரி கல்விப் பிரிவின் உள்ளடக்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
கே. கல்விப் பிரிவின் உள்ளடகத்தின் மாதிரிகள் உள்ளனவா?
ஆம்! எமது மாதிரி கல்விப் பிரிவின் உள்ளடக்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
கே. கல்வி உரைகள் யாவை?
ஒவ்வொரு கல்விப் பிரிவின் கல்வி உரையானது, இன்றைக்கான சத்தியம் விளக்கவுரை தொடர்களின் தொகுதிகளில் ஒன்றிலிருந்து வரும் PDF கோப்பில் இருக்கும் ஒரு டிஜிட்டல் பாடப்புத்தகமாகும். 350-க்கும் 700க்கும் இடைப்பட்ட பக்கங்களுடன் அச்சிடப்பட்ட வடிவிலிருக்கும் இத்தொகுதிகளில் வேதாகமத்தின் விளக்கமும் பயன்பாடும் நிரம்பியுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் உங்கள் மத நூலகத்தின் ஒரு விலைமதிக்கமுடியாத அங்கமாக கல்வி உரைகள் இருக்கும்.
கே. ஒவ்வொரு கல்விப் பிரிவின் இறுதியில் கல்வி உரையை நான் என்ன செய்வது?
கல்விப் பிரிவின் போது நீங்கள் பெற்ற கல்வி உரையையும் பதிவிறக்கம் செய்யக்கூடிய மற்ற பாடங்களையும் நீங்களே வைத்துக் கொண்டு கல்விப் பிரிவு முடிந்த பிறகும் பயன்படுத்தவும். ஒவ்வொரு கல்விப் பிரிவும் முடிவடைவதற்கு முன்பே எல்லா கோப்புகளையும் கணினியில் சேகரித்துக் கொள்வதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
கே. கல்வி உரையின் அச்சிடப்பட்ட நகல் ஒன்றைப் பெற முடியுமா?
கல்வி உரையின் அச்சு நகல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். ஆங்கிலத்தில் கல்விப் பிரிவை மேற்கொள்ளும் அமெரிக்காவிலுள்ள மாணவர்கள், ஒவ்வொரு கல்விப் பிரிவின் டிஜிட்டல் நகலோடு அச்சிடப்பட்ட புத்தகத்தையும் தானாகவே பெறுவர். அச்சிடப்பட்ட புத்தகம் மற்றும் கப்பல் வாணிக செலவுகள் கல்விப் பிரிவுக்கான அமெரிக்க விலையில் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் கல்விப் பிரிவில் சேரும் போது கப்பல் வாணிக முகவரியை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். கல்விப் பிரிவுக்கான 50 நாட்கள் சேர்க்கையிலிருந்து தொடங்கும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும். எனவே, கற்பதை தொடங்குவதற்கு முன்பு அச்சிடப்பட்ட நகலுக்காக காத்திருக்க வேண்டாம் என நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதிகமான சர்வதேச கப்பல் வாணிக செலவுகளால், அமெரிக்காவிலிருந்து வெளியே இருக்கும் மாணவர்கள் டிஜிட்டல் படிப்புப் புத்தகத்தை மட்டுமே பெறுவர். உயர் கப்பல் வாணிக செலவு இருந்தாலும் ஆங்கிலத்தின் அச்சிடப்பட்ட நகலைப் பெற நீங்கள் விரும்பினால், staff@resourcepublications.net-க்கு மின்னஞ்சல் அனுப்பி அல்லது 1-501-305-1472 எண்ணை அழைத்து Resource Publications -ஐ தொடர்பு கொள்ளலாம் (தொலைப்பேசி எண்ணுக்கு முன்பு உங்கள் நாட்டின் வெளிக் குறியீட்டு எண்ணை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கும்).
கே. கல்வி உரையின் ஒரு நகலை நானே அச்சிட முடியுமா?
உங்களுடைய சொந்த உபயோகத்திற்காக கல்வி உரையின் ஒரு நகலை நீங்கள் அச்சிடலாம். கல்வி உரை அல்லது நகலை வேறொருவருக்கு கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு கல்வி உரையும் பல நூறு பக்கங்கங்களைக் கொண்டிருப்பதால், அவற்றை நீங்களே அச்சிடுவதில் கணிசமான அளவு மையும் காகிதமும் பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
கே. கல்விப் பிரிவுகள் எவ்வாறு தரநிலைப்படுத்தப்படுகின்றன?
கல்விப் பிரிவில் உங்கள் முன்னேற்றமானது ஐந்து பிரிவு தேர்வுகள் மற்றும் ஒரு இறுதி, விரிவான தேர்வு மூலம் அளவிடப்படுகிறது. அனைத்து ஆறு தேர்வுகளின் சராசரி மதிப்பெண் உங்களுடைய கடைசி கல்விப் பிரிவின் தரநிலையாக இருக்கும்.
கே. என்னுடைய தரநிலைகளின் எழுத்துப்படி உள்ளதா?
ஆம். நீங்கள் வலைத்தளத்தின் உள்ளே நுழையும் போது, வலைப்பக்கத்தின் மேல் வலப்பக்கத்தில் உள்ள என் கணக்கு என்ற பட்டியின் கீழ் என் தரநிலைகள் என்பதைக் காணலாம்.
கே. மற்ற மாணவர்களுடன் நான் கலந்துரையாடுவது எவ்வாறு?
வலைத்தளம் மூலமாக நீங்கள் மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடக் கூடாது, ஆனால், உள்ளூர் TTS பள்ளி அல்லது கல்விக் குழுவின் மற்ற மாணவர்களுடன் நீங்கள் இணைவதை நாங்கள் மிகவும் ஊக்குவிக்கிறோம். குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்காக பள்ளி ஒன்றை எவ்வாறு தொடங்குவது பக்கத்தைப் பார்க்கவும்.
தேர்வுகள் குறித்த கேள்விகள்
கே. எத்தனை தேர்வுகள் உள்ளன?
ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் ஐந்து பிரிவு தேர்வுகளும் ஒரு இறுதி, விரிவான தேர்வும் உள்ளன.
கே. ஒவ்வொரு தேர்வையும் நான் எப்போது மேற்கொள்வது?
தேர்வுகளை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. ஒவ்வொரு பிரிவின் பாடங்களையும் நீங்கள் வாசித்து கற்ற பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்வை மேற்கொள்ளலாம். ஆறு தேர்வுகளையும் மேற்கொள்வதற்கு உங்களுக்கு 50 நாட்கள் அவகாசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்து ஆறு தேர்வுகளையும் நீங்கள் மேற்கொள்வதை உறுதிப்படுத்தி உங்கள் பாதையில் சரியாகச் செல்ல ஏதுவாக வேகக்கட்டுப்பாட்டு வழிகாட்டுதலை நாங்கள் அளிக்கிறோம்.
கே. ஒவ்வொரு தேர்விலும் எத்தனை கேள்விகள் உள்ளன?
ஒரு பெரிய குவியலிலிருந்து தோராயமாக தேர்வு செய்யப்பட்ட சாத்தியமான கேள்விகளைக் கொண்ட 50 கேள்விகள் வரை ஒவ்வொரு தேர்வும் கொண்டுள்ளது.
கே. தேர்வுகளில் உள்ள கேள்விகள் எத்தகையவை?
தேர்வுக் கேள்விகள், பன்முகத் தெரிவு மற்றும் சரி/தவறு கேள்விகளின் ஒரு கலவையாகும். பன்முகத் தெரிவு கேள்விகளில், நாங்கள் ஒரு கேள்வியை கொடுத்து, பல விருப்பத்தேர்வுகளிலிருந்து ஒரு விடையைத் தேர்ந்தெடுக்குமாறு கூறுவோம். சரி/தவறு கேள்விகளில், நாங்கள் ஒரு கூற்றைக் கொடுப்போம், நீங்கள் கற்றதன் அடிப்படையில் அக்கூற்று சரியா தவறா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். மாதிரி கேள்விகள் சிலவற்றைக் காண எங்கள் மாதிரி கல்விப் பிரிவின் உள்ளடக்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
கே. தேர்வுகள் எந்தப் பாடங்களை உள்ளடக்குகின்றன?
ஒவ்வொரு பிரிவிற்கும், நீங்கள் படிக்க வேண்டிய பக்கங்களை உங்களுக்கு ஒதுக்குகிறோம், மேலும் அப்பக்களிலிருந்து கேள்விகளை எழுப்புகிறோம். “பயன்பாடு” அல்லது “மேலும் கற்பதற்கு” என்று ஒதுக்கப்பட்ட படிப்பு அடங்கிய பிரிவிலிருந்தோ அல்லது விளக்கவுரை கல்வி உரை அல்லாத வேறு கல்விப் பிரிவு பாடங்களிலிருந்தோ கேள்விகள் எடுக்கப்படுவதில்லை. அனைத்து ஐந்து பிரிவு தேர்வுகளிலுள்ள அதே பாடங்கள் விரிவான தேர்வில் அடங்கும்.
கே. தேர்வுகள் எப்போது தரநிலைப்படுத்தப்படுகின்றன?
தேர்வை முடித்துவிட்டு “பதில்களை சமர்ப்பி” என்பதை நீங்கள் அழுத்திய உடனே தேர்வுகள் தரநிலைப்படுத்தப்படுகின்றன.
கே. நான் தவறவிட்ட தேர்வுக் கேள்விகளை என்னால் காண முடியுமா?
ஆம். கற்பதற்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகையால் நீங்கள் தவறவிட்ட கேள்விகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம். பதில் இருக்கக்கூடிய கல்வி உரையின் பாகத்தை பலமுறை பார்ப்பதன் மூலம் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும். விரிவான தேர்வில் அதே கேள்வி மீண்டும் தோன்றக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
கே. தேர்வுகளுக்கு காலவரையறை உள்ளதா?
இல்லை. நீங்கள் ஒவ்வொரு கேள்வியையும் கவனமுடன் கருத்தில் கொள்வதற்கு தேவைப்படும் நேரம் எடுத்துக் கொள்வதை ஊக்கப்படுத்துகிறோம்.
கே. தேர்வுகளுக்கான தயாரிப்பில் எனக்கு உதவி புரிய கல்வி வழிகாட்டி உள்ளதா?
ஆம். தேர்வுக்காக நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகளும் கோட்பாடுகளும் அடங்கிய ஐந்து கல்வி வழிகாட்டிகள் உள்ளன. விரிவான தேர்வுக்கு தயாராவதற்கு எல்லா ஐந்து கல்வி வழிகாட்டிகளையும் நீங்கள் கற்க வேண்டியுள்ளது. மாதிரி கல்வி வழிகாட்டியைக் காண மாதிரி கல்விப் பிரிவின் உள்ளடக்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
கே. தேர்வுகளை மேற்கொள்ளும்போது பைபிள், குறிப்புகள் அல்லது வேறு உதவியை நான் பயன்படுத்தலாமா?
இல்லை, தேர்வு தொடங்குவதற்கு முன்பே உங்கள் பைபிள், குறிப்புகள் மற்றும் பாடப்புத்தகங்கள் முதலியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
கே. அடுத்தப் பிரிவுக்குச் செல்ல நான் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்?
கல்விப் பிரிவின் அடுத்தப் பிரிவுக்குச் செல்ல தேர்வில் மாணவர்கள் குறைந்தது 70% மதிப்பெண் பெற வேண்டும். நீங்கள் பாடங்களை அறிந்து கொள்வதே எமது இலக்கு என்பதால், 70%க்கும் குறைவாக எடுத்தால் மீண்டும் படித்து தேர்வை மீண்டும் மேற்கொள்ளும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் தேர்வு மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் கேள்விகள் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், சில கேள்விகள் முதல் முறை எடுத்தது போல ஒரே மாதிரியாக இருக்காது. அடுத்தப் பிரிவுக்குச் செல்வதற்காக நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வை மேற்கொள்ளலாம், ஆனாலும் நீங்கள் தேர்வை எத்தனை முறை மேற்கொண்டீர்கள் என்று கணினியில் பதிவாகும் காரணத்தால் கடுமையாகப் படித்து முதல் முறையிலேயே வெற்றிப் பெறுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். விரிவான தேர்வை மீண்டும் மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
கே. 70% அல்லது அதற்கு மேலும் எடுத்து நான் வெற்றி பெற்ற தேர்வை மீண்டும் மேற்கொள்ளலாமா?
இல்லை. குறைந்தது 70% பெற்று வெற்றியடைந்தால் அத்தரநிலையே இறுதியாகும்.
கே. விரிவான தேர்வை நான் மீண்டும் மேற்கொள்வது எவ்வாறு?
பாடங்களை அறிந்து கொள்வதில் உங்களுக்கு உதவி புரிவதற்காக நீங்கள் வெற்றி பெறும் வரையிலும் ஐந்து பிரிவு தேர்வுகளையும் மீண்டும் மேற்கொள்வதற்கான வாய்ப்பை நாங்கள் அளிக்கிறோம். எனினும், நீங்கள் 70%க்கும் குறைவாகப் பெற்றிருந்தாலும், விரிவான தேர்வை மீண்டும் மேற்கொள்ள முடியாது. கல்விப் பிரிவிலிருந்து நீங்கள் தக்கவைத்துக் கொண்டவற்றை உண்மையாக அளவீடு செய்வதே இந்த இறுதி தேர்வாகும்.
கே. தேர்வு சமயத்தின் போது கணினி செயலிழப்பு அல்லது இணைய இணைப்பு இழப்பு ஏற்பட்டால் என்னவாகும்?
பிரச்சனை தீர்ந்த பிறகு நீங்கள் மீண்டும் தொடங்கலாம். உங்கள் இணைய இணைப்பு இடைவிட்டு நிகழ்ந்தால், ஆஃப்லைனில் தேர்வினை தொடர்ந்து மேற்கொண்டு, இணைப்பு மீண்டும் திரும்பியதும் பதில்களை சம்ர்ப்பிக்கலாம்.
தொழில்நுட்பக் கேள்விகள்
கே. இந்த வலைத்தளத்தை பயன்படுத்தத் தேவைப்படும் குறைந்தபட்ச கணினித் தேவைகள் யாவை?
முக்கிய உலாவிகள் (Google Chrome, Firefox, Internet Explorer, Opera, அல்லது Safari) ஒவ்வொன்றின் குறைந்தது மூன்று சமீபத்திய பதிப்புகளோடு இணங்கும் வகையில் எங்கள் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கணினி இவ்வுலாவிகளில் ஏதேனும் ஒன்றோடு இணங்குமானால், ஆன்லைன் பள்ளியை உங்களால் அணுக முடியும். பொதுவான குறிப்பு என்னவென்றால், இத்தளத்தின் பொதுப் பக்கங்களை உங்கள் கணினியில் காண முடியுமானால், மாதிரி கல்விப் பிரிவு பாடங்களை பதிவிறக்கம் செய்து காண முடியுமானால், உங்கள் கணினியால் ஆன்லைன் பள்ளியையும் அணுக முடியும்.
கே. இணைய இணைப்பிலிருந்து நான் விலகியிருக்கும் போது என்னால் படிக்க முடியுமா?
கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கும் தேர்வுகளை மேற்கொள்வதற்கும் மற்றும் கல்விப் பிரிவில் முன்னேறிச் செல்வதற்கும் இணைய இணைப்பு தேவைப்படும். கல்வி உரையைப் படிப்பதிலும், தேர்வுக்காக தயார் செய்து கொள்வதிலும் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பதால், க்யும் ஒரு குறிப்பிட்ட பிரிவின் கல்வி வழிகாட்டியையும் பதிவிறக்கம் செய்தவுடன் இப்பணியை ஆஃப்லைனில் செய்யலாம்.
கே. Through the Scriptures-உடன் பயிலும் போது எனது டேப்ளட் அல்லது மொபைல் சாதனத்தை நான் பயன்படுத்தலாமா?
முக்கிய மொபைல் செயலிகள் (ஆன்ட்ராய்ட் மற்றும் iOS போன்றவை) ஒவ்வொன்றின் குறைந்தது மூன்று சமீபத்திய பதிப்புகளோடு இணங்கும் வகையில் எங்கள் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இலவசமாக கிடைப்பவைகளை உட்கொண்ட பல பயன்பாடுகளால் கிடைக்கும் PDF கோப்புகளையும் உங்களால் காண முடிய வேண்டும். உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்ளட் இத்தகுதிகளை கொண்டிருந்தால், ஆன்லைன் பள்ளிக்காக அதை பயன்படுத்த இயலும். பொதுவான குறிப்பு என்னவென்றால், இத்தளத்தின் பொதுப் பக்கங்களை உங்கள் சாதனத்தைக் கொண்டு காண முடியுமானால், மாதிரி கல்விப் பிரிவு பாடங்களை பதிவிறக்கம் செய்து காண முடியுமானால், உங்கள் சாதனத்தால் ஆன்லைன் பள்ளியையும் அணுக முடியும்.
கே. என் கணக்குடன் சம்பந்தப்பட்ட கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் முகவரியை என்னால் மாற்ற முடியுமா?
உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது கடவுச்சொல்லை நீங்கள் இங்கே மாற்றலாம்.
கே. என்னால் கல்வி உரையை சரியாக பார்க்க முடியவில்லை அல்லது அது சரியாக காண்பிக்கப்படவில்லை. அப்போது நான் என்ன செய்வது?
டிஜிட்டல் கல்வி உரைகள் PDF வடிவில் உள்ளன. இக்கோப்புகளைத் திறப்பதற்கு PDF reader வேண்டும். PDF திறப்பதற்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது உரையை மூடிய படி வெள்ளைக் கட்டங்கள் இருப்பது போன்ற காட்சிப் பிழைகள் இருந்தாலோ இலவச Adobe Reader-ன் தற்போதைய பதிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
கே. வலைத்தளம் சரியாக வேலை செய்யவில்லை. அப்போது நான் என்ன செய்வது?
Google Chrome, Firefox, Safari, அல்லது Opera ஆகியவற்றின் சமீபத்திய பதிப்புகளை நீங்கள் கொண்டிருப்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவும். பிரச்சனை தொடர்ந்தால், பிழை குறித்து எமது ஆதரவு பக்கத்தில் தெரிவிக்கவும். ஒரு பிழை குறித்து குறிப்பாகத் தெரிவிக்கவும். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உலாவியின் பதிப்பு, கணினி செயலி (உதாரணத்திற்கு Windows 8 அல்லது Mac OS 10.10 Yosemite போன்றவை), பிரச்சனைத் தரும் பக்கத்தின் வலை முகவரி, பிரச்சனையின் விவரம் மற்றும் அதனால் பிரச்சனை உண்டாகியிருக்கலாம் எனக்கூடிய நீங்கள் எடுத்த ஏதேனும் நடவடிக்கைகளை சேர்க்கவும்.
கே. என் தனிப்பட்ட தகவல் பாதுகாக்கப்படுகின்றதா?
உங்கள் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்புத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் கணினியிலிருந்து எங்கள் வலைப்பக்கத்திற்கு வரும் தரவு இணைப்பானது, SSL தொழில்நுட்பத்தால் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் நிதி தகவல்கள் எங்கள் சேவையகங்களில் ஒருபோதும் சேமிக்கப்படுவதில்லை, மற்றும் பணம் செலுத்துதல் முறையானது ஒரு நம்பகமான, தொழில்-நிலை கட்டண செயலி மூலம் கையாளப்படுகிறது.
ஆதரவு கேள்விகள்
கே. நான் தொடங்கிய கல்விப் பிரிவை தொடர்வது எவ்வாறு?
நீங்கள் இன்னும் உள்நுழையவில்லை என்றால், இந்த வலைப்பக்கத்தின் மேல்-வலக்கைப் பக்கம் உள்ள உள் நுழை இணைப்பை பயன்படுத்தி அதனைச் செய்யவும், அல்லது ஏற்கனவே உள்நுழைந்திருந்தால், இந்த வலிப்பக்கத்தின் மேல்-வலக்கைப் பக்கம் உள்ள என் கணக்கு என்பதை அழுத்தவும். என் கணக்கு பக்கத்திலிருந்து கல்விப் பிரிவைத் தொடரவும் எனக்கூறும் சிவப்புப் பொத்தானை அழுத்தவும். இவ்வாறு செய்வது தற்போதைய கல்விப் பிரிவின் முதல் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கிருந்து, நீங்கள் விட்ட இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.
கே. நான் ஏற்கனவே நிறைவு செய்த கல்விப் பிரிவை மீண்டும் மேற்கொள்ளலாமா?
இல்லை. இருப்பினும், நீங்கள் முன்பு கற்றவற்றை புதுப்பிக்க விரும்பும்போதெல்லாம் கல்வி உரையை மீண்டும் காண்பதற்கு ஊக்கமளிக்கிறோம்.
கே. கல்வி உரையின் என் டிஜிட்டல் நகல் தொலைந்துவிட்டது. மற்றொரு நகலை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
கல்விப் பிரிவில் நீங்கள் சேர்ந்திருக்கும் சமயத்தில், எல்லா கல்விப் பிரிவு பாடங்களையும் முழுமையாக அணுகலாம். உங்கள் தற்போதைய கல்விப் பிரிவில் உள்ள தொடங்குக பக்கத்திலிருந்து கல்வி உரையை பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்த அனைத்து கோப்புகளையும், அவற்றின் அணுகல் முடியும் வரை வைத்திருக்க வேண்டும் என்பதால், உங்கள் கணினியில் ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரித்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். கணினி செயலிழப்பு காரணமாக இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு அவற்றின் காப்புப் பிரதிகளை எடுத்து வைத்துக்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
கே. கல்வி உரையின் என் டிஜிட்டல் நகல் தொலைந்துவிட்டது மற்றும் என் கல்விப் பிரிவு அணுகல் முடிவு பெற்றது. மற்றொரு நகலை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
கல்விப் பிரிவு முடிந்த பிறகும் பாடத்தின் அணுகலைப் பெறுவதற்கான ஒரே வழி என்னவென்றால் ஒரு சிறிய கட்டணம் செலுத்தி கல்விப் பிரிவை புதிப்பிப்பதே ஆகும். என் கணக்கு பக்கம் மூலம் இவ்வாறு செய்யலாம். நீங்கள் தற்போது மற்றொரு கல்விப் பிரிவில் சேர்ந்திருந்தால், ஒரு நேரத்தில் ஒரேயொரு கல்விப் பிரிவில் மட்டுமே சேர முடியும் என்பதால், வேறு கல்விப் பிரிவை புதுப்பிப்பதற்கு முன்பு தற்போதைய கல்விப் பிரிவை முடிக்க வேண்டும். உங்கள் கல்விப் பிரிவை புதுப்பித்த உடன், அக்கல்விப்பிரிவில் நீங்கள் தவறவிட்ட எந்த கோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கே. என் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். என் கணக்குக்கு மீண்டும் செல்வது எவ்வாறு?
உங்கள் கடவுச்சொல்லை இங்கே மீட்டமைக்க முடியும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது பயனர்பெயரை உள்ளிட்டவுடன், கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான ஒரு இணைப்புடன் கூடிய மின்னஞ்சல் ஒன்றை உங்களுக்கு அனுப்புவோம்.
கே. நான் பதிவு செய்யும் போது பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கை இனிமேல் என்னால் அணுக இயலாது. என் கணக்குக்கு மீண்டும் செல்வது எவ்வாறு?
உங்களுடைய பழைய மின்னஞ்சல் கணக்கை இனிமேல் அணுக இயலாது என்ற போதிலும், உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு வலைத்தளத்திற்குள் உள் நுழைய முடியும். பிறகு, ஒரு புதிய மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கணக்கை மாற்றுவதற்கு, என் கணக்கு பக்கத்திலிருந்து, உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு விவரங்களை திருத்துக என்பதை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி வலைத்தளத்திற்குள் உள்நுழையலாம்.
கே. என் கணக்கை வேறு யாருடனாவது பகிர முடியுமா?
இல்லை. ஒவ்வொருவருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த கணக்கே தேவைப்படும்.
கே. என் கணக்கை வேறொரு நபருக்கு மாற்ற முடியுமா?
இல்லை. ஒவ்வொருவருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த கணக்கே தேவைப்படும்.
கே. நான் எங்கே ஆதரவு பெறுவது?
உங்கள் கேள்விக்கு நாங்கள் பதிலளிக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதற்கு இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் முழுவதையும் ஆராயவும். நீங்கள் ஒரு உள்ளூர் TTS பள்ளி அல்லது கல்விக் குழுவின் அங்கமாக இருந்தால், அக்குழுவின் தலைவர் அல்லது வேறு குழு உறுப்பினர்களை உதவுமாறு கேட்கலாம். மேலும் உதவி தேவைப்பட்டால், எமது ஆதரவு பக்கத்திலிருந்து எங்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக, ஆங்கிலம் தவிர வேறு மொழியில் நீங்கள் எங்களுக்கு எழுதும் பட்சத்தில், உங்களுக்கு பதிலளிக்க பல நாட்கள் எடுத்துக்கொள்வதை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.