இயேசுவின் வாழ்க்கை, 2
ஒவ்வொரு கிறிஸ்தவனும் சுவிசேஷங்களின் செய்திகளை, வாசிப்பதில் மனஎழுச்சி கொள்ளுதல் வேண்டும். இயேசுவின் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நிரல்படுத்தி தொகுத்தளித்துள்ள டேவிட் எல். ரோபர், நம்மை அதை கற்கும் அனுபவத்துக்குக் கொண்டு வருகிறார். இயேசுவின் வாழ்க்கைப் பதிவிலான, சொற்கள், உரையாடல்கள் மற்றும் அன்றாட வாழ்வின் பயன்பாடுகளின் செயல்கள், இடையிடையே வந்து வாசிப்பவரை கிறிஸ்து வாழ்ந்த வழியில் வாழ அறைகூவல் விடுக்கிறது. ரோபர் கிறிஸ்துவின் வாழ்க்கை, நம் இருதயங்களில் ஒளிரவும், அவரது பாலஸ்தீன நிலவியல் தளங்களில், இயேசுவைச் சுற்றியுள்ள பலதரப்பட்ட மக்களின் பண்புகள், வாழ்வின் ஒழுகலாறுகள் சொற்சித்திரங்களாகப் படைக்கிறார். இந்தக் கல்விப் பயிற்சி நமக்கு, பரமதந்தையிடமிருந்து கொண்டுவந்த செய்தி மட்டுமல்ல, ஆனால் காட்சிகள், ஒலிகள், மண், வாழும் முறைகள், இரவு-பகல்கள் அனைத்தும் அவர் மொத்த வாழ்வின் முழுச்சூழலையும் வடிவமைக்கிறது. இந்த இரண்டு கல்விப் பயிற்சிகளை சிந்தையோடு வாசித்தவர்கள், அதே மனிதராக இருக்க முடியாது. இயேசுவோடு வாழ்ந்த பின்னர், அவர் போதனைகளைக் கேட்டு அவர் கால மக்களுடன் கலந்து, அவரது மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாயிருப்பவர்கள் யார்தான் மாறாமல் இருக்க முடியும்?