ஆதியாகமம் 23—50
இந்தப் பாடத்துடன், வில்லியம் டபிள்யு. கிராஷம் (William W. Grasham) ஆதியாகமம் புத்தகத்தின் தனது விரிவான ஆய்வை முடித்துள்ளார். துவக்கப் புத்தகத்தின் இரண்டாம் பாகம் முழுவதும், ஆபிரகாமின் வாழ்க்கையிலிருந்து கடந்து ஈசாக்கு மற்றும் யாக்கோபின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து வழங்குகிறார். பின்பு யோசேப்பு வாழ்வினை ஒவ்வொரு வசனத்திற்கான சிறந்த ஆய்வினை அவர் கொடுத்துள்ளார், தமது நோக்கங்களின்படி, தமது தெய்வீக அருளை செயல்படுத்துதலானது, ஒவ்வொரு தருணத்திலும் தேவன் எப்போதும் இருக்கிறார் என்பதை இது விளக்குகிறது.
ஆதியாகமம் புத்தகத்தில் தேவனால் அழைக்கப்பட்ட ஜனத்தின் வரலாறானது, தேவனோடுள்ள அவர்களுடைய உறவிலேயே உள்ள என்பது தான் பிரதான அம்சமாகும். தமது ஜனத்துடன் தேவனின் நடத்தையானது அவருடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துகிறது: அவருடைய நீதியும் மற்றும் கோபமும், சுதந்திரமும் மற்றும் தண்டனையும், ஒவ்வொரு வாக்குத்தத்தத்திலும் உண்மையாயிருத்தல். இன்றைக்கு வாழும் ஒவ்வொரு நபரின் வாழ்வின் மையக் கர்த்தாவாக இருப்பதற்குத் தகுதியுடையவராகிய ஒரே மெய் தேவன் இவர். சகோதரர் கிராஷமுடன் சேர்ந்து இந்த சம்பவங்கள் மூலமாக தேவனை கூர்ந்து பார்க்கிற எவனும் தேவனைக் குறித்து நன்கு அறிந்திருப்பர். இந்தப் பாடங்களைப் பிரசங்கிக்கிற மற்றும் போதிக்கிறவர்களுக்கு அநேக உதாரணங்களையும் பிரசங்கங்களையும் இந்தத் தொகுப்புக் கொண்டுள்ளது.