எஸ்றா, நெகேமியா, எஸ்தர்
எழுபது வருட பாபிலோனிய சிறைபிடிப்பிற்குப் பின்பு மீதமிருந்த சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் தேவனுடைய ஆலயத்தைத் திரும்ப கட்டும்படிக்கு எருசலேம் திரும்புதல், பரிசுத்த தேசத்தை அவர்களுக்கு திரும்பவும் ஒப்படைத்தல், அதாவது இறுதியாக மேசியாவை அனுப்புவதற்கான வழியை ஆயத்தப்படுத்துதல்.
எஸ்றாவின் புத்தகமானது யூதர்கள் செருபாபேலின் கீழ் வந்து ஆலய மறுகட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதில் மிகவும் கஷ்டப்பட்ட சம்பவத்தைக் குறித்துச் சொல்கிறது. மேலும் வேதபாரகனும் மற்றும் ஆசாரியனுமாகிய எஸ்றா தேவனுடைய பிரமாணத்தை ஜனங்களுக்கு போதித்து தேவனுடைய உடன்படிக்கைக்கு ஜனங்களை உண்மையாயிருக்க அழைத்ததை விவரிக்கிறது.
ஆலயமானது திரும்பக் கட்டப்பட்டுவிட்டாலும்கூட, எருசலேமின் அலங்கங்கள் சுட்டெரிக்கப்பட்டு மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தது. நெகேமியாவின் புத்தகமானது அலங்கத்தைத் திரும்பக் கட்டும்படிக்கு நெகேமியா திரும்ப வந்ததைக் குறித்து சொல்கிறது. நெகேமியாவும் தனது ஜனங்களின் ஆவிக்குரிய நல்வாழ்வில் கரிசனை கொண்டு தேவனுடனான அவர்களுடைய உடன்படிக்கையை புதுப்பிக்கும்படிக்கு வழிநடத்தினான்.
யூதர்களின் சிறையிருப்புக் காலத்திற்குப் பின்பு அவர்களுடைய இருப்பிற்கு ஏற்பட்ட அச்சுருத்தல குறித்து விவரிக்கிறது எஸ்தர் புத்தகம். அதிர்ஷ்டவசமாக ஒரு யூதகுல பெண்மணி பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் இராஜஸ்திரீயானாள். அவளுடைய தைரியத்தின் நிமித்தமாக அவளுடைய ஜனத்திற்கு எதிராக இருந்த மிகக் கொடிய சதியானது தோற்கடிக்கப்பட்டது மற்றும் சாம்ராஜ்ஜிம் முழுவதும் பரவியிருந்த யூதர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. கோய் டி. ரோப்பர் (Coy D. Roper)