பிரசங்கி மற்றும் சாலமோனின் பாடல்
வாழ்க்கை மற்றும் அன்பின் அர்த்தம் குறித்து குழப்பத்துடன் உலகில் வாழும் கிறிஸ்த்துவர்களுக்கு ஞான இலக்கியத்தின் இவ்விரு புத்தகங்களும் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பிரசங்கி புத்தகத்தில், தன்னல ஆசையினாலான ஒரு பயனற்ற வாழ்க்கையை தவிர்த்து ஒவ்வொரு செயலையும் தீர்ப்புக்கு உட்படுத்துகின்ற இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழுமாறு சாலமோன் (“போதனையாளர்”) நம்மை எச்சரிக்கிறார். பிறகு, சாலமோனின் பாடலில், அன்பின் நல்லொழுக்கங்களையும் மற்றும் வெற்றிகரமான ஒரு திருமண உறவை கட்டுவது குறித்தும் அவர் கற்றுத்தருகிறார். காதல், நம்பிக்கை, மற்றும் முரண்பாட்டில் ஈடுபாடு போன்ற உறவு சார்ந்த பிரச்சினைகளை இப்புத்தகத்தின் பாடங்கள் கொண்டுள்ளன.
கவனமான ஆராய்ச்சியின் மூலம், டாக்டர் டென்னி பெட்ரில்லோ அவர்கள் இவ்விரு புத்தகங்களின் அர்த்தத்தை பிரிக்காமல் கொடுத்துள்ளார். மற்ற அணுகுமுறைகளோடு படிக்கும்போது, இறைவனுடைய வார்த்தையின் ஒருமைப்பாட்டிற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய மரியாதையை நிரூபிக்கும் சாலமோனின் எழுத்துக்களின் சாத்தியமான புரிதலை வழங்குவதோடு நம் காலத்திற்கு தேவையான அருமையான பாடங்களையும் அவர் அளித்துள்ளார்.