கிறிஸ்துவின் வாழ்க்கை, 1
ஓவ்வொரு கிறிஸ்தவனும் சுவிசேஷ செய்தியை வாசிக்கும்போது, ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சம்பவங்கள் நிகழ்ந்த கால வரிசைகளின்படி தொகுத்து கொண்டு போவதுடன், அவர் வாழ்வில் பதிவான வார்த்தை, உரையாடல்கள், செயல்கள், ஆகியவற்றோடு வாசிக்கிறவரை தினசரி வாழ்வில் பயன்படுத்தி, அவர் வாழ்ந்தது போலவே வாழச் சவால் விடுகிறார். ரோபர் கிறிஸ்துவின் வாழ்வை, நம் வாழ்வின் இதயங்களில் கொழுந்துவிட்டெரிய அறைகூவல் விடுக்கிறார், இயேசுவைச் சுற்றியிருந்த பலதரப்பட்ட மக்களின் பின்னணியோடு பாலஸ்தீன நிலவியலை, அந்த மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பு நலன்களின் வார்த்தை சித்திரங்களை நமக்குத் தருகிறார். இந்தப் பயிற்சி, கிறிஸ்து பிதாவிடமிருந்து கொண்டு வந்த செய்தி மட்டுமல்ல அவரைச்சுற்றிய காட்சிகள், சப்தங்கள், தூசுகள், வாழ்க்கை முறையோடு ஒன்றிவிட்ட பின்னணிச் சூழலை நம் கண்முன் நிறுத்துகிறது. இந்தப் பயிற்சியும், அடுத்த பயிற்சியும் கவனத்துடன் வாசித்தவர்கள், அப்படியே இருந்துவிட இயலாது. இயேசுவோடு நடந்து அவர் போதனைகளைக் கவனித்து, அவர் கால மக்களோடு கலந்து, அவர் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் கண்டுணர்ந்தவர்கள் யார்தான் மாறாமலிருக்க இயலும்?