எபேசியர் மற்றும் பிலிப்பியர்
பவுலின் எபேசியர் நிருபமானது “கிறிஸ்துவுக்குள்” கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விளக்குகிறது. நமது கர்த்தர் பிதாவின் வலது பாரிசத்திற்கு மேன்மையாக உயர்த்தப்பட்டு, தமது சபைக்குத் தலையாக ஆட்சி செய்கிறதை அது வலியுறுத்துகிறது. வேறுபட்ட அங்கத்தினர்களைக் கொண்ட இந்த ஒரே சரீரம் விசுவாசத்தில் ஒருமனப்பட்டிருக்கவும் தேவனைப் பின்பற்றும் வாழ்வுமுறையைக் கொண்டிருக்கவும் அழைக்கிறது. இந்த நிருபம் தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கமும் அவசியப்படுகிற ஆவிக்குரிய போரில் நாம் உடன்பட்டிருப்பதையும் தொடர்ந்து விழிப்புடனிருக்க வேண்டியதையும் கூட நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
பிலிப்பியருக்கு எழுதின நிருபம், சுவிசேஷத்தைப் பரப்புவதில் ஐக்கியம் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை புகழ்கிறது. பவுலின், விசுவாசிக்களுக்கான அறைகூவல், ஒரே ஆவியில் ஒன்று சேர்ந்திருக்கிறவர்களாக, பரலோக இராஜ்யத்தின் பிரஜைகளாக வாழும்படி இருக்கிறது. இந்த ஐக்கியம் மனத்தாழ்மையை பூமியில் தம்முடைய திரு அவதாரத்தில் செய்து காட்டிய கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து வருகிறது. கிறிஸ்துவைப்போல உயர்த்தப்பட்டிருப்பதற்கு முன்பு துன்பத்தையும் உபத்திரவத்தையும் நாம் அனுபவிக்க வேண்டும்.
ஜெய் லோக்ஹார்ட்டும் டேவிட் ரோப்பரும் அவர்களில் அநேக வருடப் படிப்பு மற்றும் ஊழியத்திலிருந்து அவர்களுடைய வாசகர்களை அறைகூவலான நடையில் ஈடுபட்டிருக்க இந்த நிருபங்களில் வழியாக அழைக்கிறார்கள். இந்தப் பாடத் தொடரிலிருந்து தேவனுடைய வசனத்தின் மாணாக்கர் எல்லாரும் பயனடைவர்.