1 கொரிந்தியர்கள்
கொரிந்துவிலுள்ள முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய இந்த நிருபத்தில், இன்றைய நாட்களில் சபையைத் தொடர்ந்து துன்புறுத்தும் காரியங்களில் சிறிய மாற்றங்களுடன் அநேக கேள்விகளுக்குப் பதிலளித்தார். டுயேன் வார்டனின் வசனம் வசனமான படிப்பானது, வேத வசனங்களிலுள்ள கடினமான காரியங்களை கையாண்டு, பிரிவினை, ஒழுக்கக்கேடு, கோட்பாட்டில் குழப்பம் மற்றும் உலகப்பற்று ஆகியவை இந்த முதல் நூற்றாண்டு உள்ளூர் சபையைத் தொல்லைப்படுத்தியதற்கு, நடைமுறைப் பயன்பாட்டைத் தருகிறார்; மற்றும் அவர்களுடைய அநேக பிரச்சனைகளுக்குக் காரணமான-பெருமை- இன்றும் நம்மிடையே பொதுவானதாக இருக்கிறது. இந்த தொல்லைகளை மேற்கொள்ளுவதற்கு தெளிவில்லாததிலிருந்து திடமாக மாற்றப்பட்ட அன்புதான் திறவுகோல் என்று பவுல் அறிந்திருந்தான். 13ம் அதிகாரத்தில் அப்போஸ்தலன் தன் வழக்கமான வசீகரிக்கும் விவாதத்தால் இந்த பண்பான அன்பைப்பற்றித் தெளிவாக விவரித்து விளக்கி, அன்பால் உண்மையாக உந்தப்பட்ட கிறிஸ்துவின் பின்பற்றாளர் மற்றவர்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்று காட்டுகிறார். இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களாக இந்த வசனங்களில் போதிக்கப்படும் கொள்கைகளில் நிலைத்திருங்கள், அப்பொழுது அநேக பிரச்சனைகள் தீர்க்கப்படக்கூடும், மற்றும் சபையானது அன்பான ஒற்றுமையான சரீரமாக இருக்கக்கூடும்.